நளினி, முருகன் வற்சப் அழைப்பில் பேசுவதால் என்ன சிக்கல் உயர் நீதிமன்றம் கேள்வி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன், நளினி ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் வற்சப் அழைப்பில் பேச அனுமதி கோரி நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்திலுள்ள தனது மூத்த சகோதரியிடமும் வற்சப் அழைப்பில் தினமும் பத்து நிமிடங்கள் பேச அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சந்தரேஷ், பி.டி.ஆஷா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வற்சப் அழைப்பில் பேசுவதற்கு அனுமதி வழங்குவதில் அரசிற்கு என்ன பிரச்சினை ஏற்படும்? என்று கேள்வி எழுப்பினார்.

நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.