தான் இழந்த இந்திய பகுதிகளை வரைபடத்தில் உள்ளடக்கிய நேபாளம்

நேபாளம் நேற்று(20) வெளியிட்ட தனது வரைபடத்தில் இந்திய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம் வெளியிட்ட தனது வரைபடத்தில் இந்தியப் பிராந்தியங்களான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா போன்ற இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நேபாள பிரதமர் கே.பி.ஒளி, புதிய வரைபடங்கள் வெளியிடப்படும் எனவும் அதில் தமக்கு சொந்தமாகக் கருதும் அனைத்துப் பகுதிகளும் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கருத்துத் தெரிவிக்கும் போது, மேற்படி பகுதிகள் நேபாளத்தின் பகுதிகள் எனவும், இந்தப் பிரதேசங்களை மீட்பதற்கு உறுதியான ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கமைவாக அனைத்து பகுதிகளையும் இணைத்து அதிகாரபூர்வ வரைபடம் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில் சீனா இருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.  இந்த சர்ச்சை 1816ஆம் ஆண்டு சுகோலி உடன்படிக்கையின் கீழ், நேபாள மன்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை பிரிட்டிஸாரிடம் கலாபானி மற்றும் லிபுலேக் உள்ளிட்ட பிரதேசங்களை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.