தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை 26ம் திகதிக்கு முன்னர் புதைக்கும்படி உத்தரவு

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் தற்கொலை குண்டுதாரியான முகமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை உடனடியாக பிரச்சனைகள் எதுவும் இன்றி எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னர் புதைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கட்டளையிட்டுள்ளார்.

குறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) மட்டு. நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனை மட்டு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்க முற்பட்டபோது அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறே கள்ளிங்காடு மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஊள்ளுராட்சி மன்றங்களில் இததை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரவேடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்ட நிலையில் இதற்கு பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கல்லடி பாலத்தில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீதி மறியல் போராட்டத்தால் வீதிபோக்குவரத்து செயலிழந் ததையடுத்து பொலிசார் ஆர்பாட்டகாரர் மீது கண்ணீர் புகைக்கண்டு தடியடி பிரயோகம் செய்து ஆர்பாட்ட காரர்களை கலைத்ததுடன் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர்

பொலிஸார் இந்த உடற்பாகங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதால் மாவட்டத்தில் அசாதாரண நிலை தோன்றியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுர்த்தனர் இதனையடுத்து கடந்த மாதம் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த உடற்பாகங்களை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து மீண்டும் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தற்கொலை குண்டு தாரியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரின் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுக்கப்பட்டது.

இதன்போது நீதவான் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கம் உடற்பாகங்களை அரசாங்க அதிபர் ஊடாக பிரச்சனைகள் இன்றி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் புதைக்குமாறும் அதன் அறிக்கையை 26 த் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்பு பிரிவினருக்கு கட்டளையிட்டுள்ளார்.