தமிழ் வரலாறு தேடும் இளைஞர்கள்

கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியை மையமாக வைத்து, திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச.இளங்கோ என்பவர் முடிவு செய்துள்ளார். இவருக்கு உதவியாக இவரின் நண்பர்களான லோகேஸ், இளைய பெருமாள் மற்றும் பாராஜி பாஸ்கரன் என்பவர்கள் இவருடன் இணைந்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக இந்த திரைப்படத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஹிப்பொப் தமிழாவின் தயாரிப்பில் “தமிழி“ என்ற பெயரில் வெளிவரவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் பற்றிய ஆர்வத்தினால் இப்படத்தைத் தயாரிப்பதாக இளங்கோ தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் தொன்மை, ஆதியில் எழுதப்பட்ட தமிழ் வடிவம் போன்றவை பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும் என எண்ணியதாலேயே அதை ஆவணப்படமாக்க முடிவு செய்ததாகவும், இவை பற்றி அறிவதற்கு நேரில் செல்லவோ, தெரிந்து கொள்ளவோ மக்களால் முடியாததால்,  இதை தான் ஆவணப் படத்தின் ஊடாக தெரிவிக்க இருப்பதாக இளங்கோ மேலும் தெரிவித்தார்.

இந்தப் படத்தை தயாரிப்பதற்காக சுமார் 18,000 கிலோமீற்றர் பயணம் செய்திருப்பதாகவும், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய பிற மாநிலங்களில் உள்ள கல்வெட்டுக்களில் பிராமி எழுத்துக்களைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும், மலைக் கிராமங்களில் கல்வெட்டுக்களை தேடி அலைந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

தற்போது எழுதப்படும் எழுத்துக்கள் போல் முந்தைய எழுத்துக்கள் இருக்கவில்லை என்றும், எழுத்துக்கள் குறியீடுகளும், வேறுபட்டவையாகவுமே இருந்தன என்றும், இந்த ஆவணப் படத்தில் இவை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்றும் இளங்கோ தெரிவிக்கின்றார்.

Tamil youth தமிழ் வரலாறு தேடும் இளைஞர்கள்தமிழ் மொழியின் எழுத்துக்களை சமணர்கள் உருவாக்கினார்கள் என்ற கருத்தைப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் தமிழக பகுதிகளில் உருவான எழுத்து வடிவத்தை தான் சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் வணிகர்கள் வட இந்தியா உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பதை உணர்த்த அறிவியல் ரீதியான குறிப்புகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு சுமார் கி.மு.500 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என தெரியவருகின்றது. இந்தியாவில் உள்ள பழமையான அசோகன் பிராமி கல்வெட்டு கி.மு 300 ஆண்டுகளைச் சேர்ந்தது.

குஜராத்தில் உள்ள அசோகன் பிராமி கல்வெட்டு, தஞ்சாëர் பெரிய கோயில், விழுப்புரம் திருநாதர் குன்றில் உள்ள கல்வெட்டுக்கள் மதுரை மாங்குளத்தில் கிடைத்தவை. ஆந்திராவில் ஏர்ராகுடி, கர்நாடகாவில் பெல்லாரியில் உள்ள சான்றுகள் என பல கல்வெட்டுகளை “தமிழி“ திரைப்படம் ஆவணப்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளாக உருவாக்கிய காட்சிகளை மிக விரைவில் வெளியிடவுள்ளது.