தமிழின அழிப்பில் ரணில் தற்போதும் தீவிரமாகவே செயற்படுகிறாரா?

விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெருமளவான அப்பாவித் தமிழ் மக்களை கைது செய்த சிறீலங்கா அரசு அவர்களை நீண்டகாலம் தடுத்துவைத்து, துன்புறுத்தி ஒரு இனஅழிப்பில் ஈடுபட்டுவருகின்றது.

இந்த தமிழ் மக்களின் குடும்பங்களின் நிலை தொடர்ந்தும் துன்பமாகவே இருந்து வருகின்றது. பெருமளவான தமிழ் மக்கள் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரும் அரசியல் கைதிகளாக உள்ளனர்.

ஆனால் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களைப் படுகொலைசெய்து, 400 இற்கு மேற்பட்டவர்களை காயமடையச் செய்த முஸ்லீம் ஆயுதக்குழுவிரைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கா ஒருபோதும் தமிழ் மக்களைக் காப்பாற்றியதாகவோ அல்லது அவர்களுக்கு உதவியதாகவோ வரலாறு இல்லை. அழித்த வரலாறுகளே உண்டு. ஆனால் அவர் முஸ்லீம் மக்களைக் காப்பாற்றுவதும், முஸ்லீம் மக்கள் ரணிலை ஆதரிப்பதும் காலம் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள்.

போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆகியும், தமிழர் பிரதேசங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை, ஆனால் குண்டு வெடித்து ஆறு மாதங்களுக்குள் முஸ்லீம் பிரதேசங்களில் இயல்புநிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே தமிழின அழிப்பில் ரணில் தற்போதும் தீவிரமாகவே செயற்படுகிறாரா என்ற கேள்வியை இது தோற்றுவித்துள்ளது.