தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து , இன்று 09.09.2019 அன்று Germany நாட்டில் Saarbrücken மாநகரசபையில் முதல்வருடனும் , பத்திரிகை நிருபருடனும் ஏற்பட்ட சந்திப்பின் பின் France நாட்டின் எல்லைக்குள் எழுச்சியோடு நுழையப்பட்டது.

தொடர்ச்சியாக Sarreguemines மாநகரசபையில் இரு பத்திரிகை ஊடகங்களும் மற்றும் ஒரு தொலைக்காட்சி ஊடகம் முதல்வரும் மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

அத்தோடு Mosaïque, Républicaine Lorraine ,dna போன்ற ஊடகங்களுடன் நடைபெற்ற கருத்துப் பகிர்வில் மனிதநேய ஈருருளிப் பயணாளர்கள் எம் தாயகத்தில் தமிழீழ மக்கள் மீது தொடர்ச்சியாக ஒரு இனச்சுத்திகரிப்பை செய்து கொண்டிருக்கும் சிங்கள அரசிடம் இருந்து எம் மக்கள் விடுதலை பெற வேண்டும் எனவும் , தாயகத்தில் 2009 ஆம் ஆண்டு அன்று கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வேண்டும் முகமாக அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்தி எமது இதர முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப் பட்டது.

UN walk 2 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்எமது அறவழிப்போராட்டத்திற்கு French ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் கண்காணிப்பில் எமக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பும் இன்று நடைபெற்ற பயணத்தில் பெரும் உற்சாகத்தையும் அறவழிப்போராட்டத்தின் மீதும் பெரும் நம்பிக்கையினைக் கொடுத்தது.

நிறைவாக Sarre union மாநகரசபை சந்திப்பின் பின் Phalsbourg மாநகரத்தில் இயற்கையின் அரவணைப்பில் மாவீரர் துணைநிற்க இனிதே நிறைவடைந்தது. நாளை காலை Phalsbourg , Sverne மாநகரசபை சந்திப்பின் பின் Starsbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் 16.09.2019 அன்று ஐ. நா முன்றலில் நடைபெற இருக்கின்ற முக்கிய கவனயீர்ப்புப் பேரணி நோக்கி விரைகின்றது.

UN walk1 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டம்