தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை கோரி கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)  வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.

2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது.

3) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது.

4) இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிக் காலம். குறித்த விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனடிய அரசு கோரிக்கை விடுக்கிறது.

இந்த தீர்மானம் NDP கட்சியின் மனித உரிமைக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் Cheryl Hardcastle பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.