தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான தமது குரலை கனேடிய சமூ, அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தங்கொன்றில் இதனை ஆழமாக பதிவு செய்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ, ஸ்காபுறுவில் கென்னடி வீதியில் அமைந்துள்ள மிலிக்கன் சனசமூக நிலையில், ஓகஸ்ற் 30ம் நாளன்று இக்கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, முன்னாள் ஒன்ராறியோ சட்டமா அதிபர் மல்லிகா வில்சன், லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்  சான் சென், கலாநிதி அனு சிறீஸ்கந்தராஜா, சர்வதேச மன்னிப்புச் சபை நிர்வாகி யோண் ஆர்க், மனித உரிமையாளர் காஸ் கயூரி, நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினர் உஷா சிறீஸ்கந்தராஜா, – சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான தம்பு கனகசபை  ஆகியோர் நீதிக்கான குரரை எழுப்பியுள்ளனர்.

பிரமுகர்களின் கருத்துரைகள் :

லிபரல் கட்சிப் கனேடிய பராளுமன்ற உறுப்பினர் சான் சென் :

சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்ற விடயத்தில், கனேடிய பராளுமன்ற உறுப்பினர் ஹரி  ஆனந்தசங்கரி அவர்களின் விடாமுயற்சி முக்கியமானது. கனேடிய பராளுமன்றத்தில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களது நீதிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதோடு, தமிழ் மக்களுக்கான எனது தோழமை எப்போதும் இருக்கும்.

முன்னாள் ஒன்ராறியோ சட்டமா அதிபர் மல்லிகா வில்சன் :

கனடாவில், குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெருந்தொகையான தமிழர்கள் வாழ்வதால் இங்குள்ள அனைத்து அரசியல் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு  தமிழர்கள் மீதான இனப்படுகொலையினை மட்டுமல்ல, தமிழர்களின் அரசியற் பிரச்சனைகள் உட்பட முக்கிய விடயங்களை, கனேடிய அரசாங்கத்தின் ஊடாக  வேறு நாடுகளுக்குச் எடுத்துச் சொல்லி சர்வதேச ஆதரவைத் திரட்ட வேண்டும்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி :

சிறிலங்கா அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைச்சபையில் அனைத்துலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதியை சரிவர நிறைவேற்றாத நிலையில்தான், சிறிலங்கா தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த மே 15,2019இல்  அனைத்துக் கட்சிகளும் சிறிலங்கா தொடர்பில் ஒரு  சர்வதேச விசாரனை ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்மானத்தை ஏநிறைவேற்றியிருந்தன. தமிழர்களுக்கான நீதிக் செயல்முறையில் முக்கியமானதாகும். இனியும் சிறிலங்கா தமதிக்காது கொடுத்த வாக்குறுகளை நிறைவேற்றத் தவறினால் இத்தீர்மானம் எதிர்காலத்தில் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியாக மாறும்.

கலாநிதி அனு சிறீஸ்கந்தராஜா :

கனடாவில் தமிழினம். வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையுடன்  செயல்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும், ஒற்றுமையின் மூலம் எமது பலத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்கட்கு உதவி செய்வதற்கு அனைவரும் முன் வருவது நமது கடமைகளில் முக்கியமான ஒன்றாகும்.

சர்வதேச மன்னிப்புச் சபை நிர்வாகி யோண் ஆர்க் :  

2009ம் ஆண்டுக்கு முன்னர் தான் சிறிலங்கா தூதுவர், முக்கிய அதிகாரிகளை சந்தித்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதித்ததாகவும் , விளங்கப்படுத்தியதாகவும், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்ட சந்திப்புக்கள் இலங்கை விடயத்தில் வெற்றி அளிக்காமல் போனமை காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் கவலையளிக்கும் ஒரு விடயமாகும்.

மனித உரிமைவாதியும் ,எழுத்தாளருமான காஸ் கயூரி :

தென்னாபிரிக்கவில் வெள்ளையர் ஆட்சியில் நடந்த சட்டமீறல்களையும்,காணாமல் ஆக்கப்பட்டோரையும் இவ்வேளை நினைவு கூருகின்றேன். தென்னாப்பிரிக்க இனவெறிக்கொள்கை சிறிலங்கா விவகாரத்திலும் வருகின்றது.

சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான தம்பு கனகசபை :

 சர்வதேச சட்டத்திற்கு முரணான பல செயல்கள் இலங்கையில் நடந்து விட்டதையும், அவற்றை நாம் சர்வதேச நாடுகளின் பார்வைக்குக் கொண்டு சென்று இலங்கைத் தீவில் இனப்படுகொலை 70 வருடங்களாக நடைபெற்று வருவதனை நிரூபிப்பதன் மூலம் எமக்கான நீதியினை பெற்றுக் கொள்ள முடியும் . அதுவே நாம் நாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும்,காணாமல் போனோருக்கும் செய்யும் பெரும் கைமாறாகும்.

நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் செனட்டர் உஷா சிறீஸ்கந்தராஜா :

2009ம் ஆண்டுக்கு பின்னராக ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான செயல்வழிப்பாதையில் நா.க.த அரசாங்கம் இதுவரை பல விடயங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்னமும் முன்னெடுத்து வருகின்றது.

Aug 30 Event Ca 3 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்தமிழீழ அரசின் சுதந்திர சாசனத்தை வரைந்தது, ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரத்தில் சிறிலங்காவின் நடப்பாடுகளை கண்காணிக்க, பன்னாட்டு நிபுனர் குழுவினை நியமித்தது இதில் முக்கியமானது. குறிப்பாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துவதற்கான 1.6 மில்லியன் மேற்பட்ட மக்களின் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடாத்தியது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு பொறிமுறையாக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை நிறுவி முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு பிரமுகர்களின் கருத்துரைகள் அமைந்திருக்க, முன்னராக சங்கீத பூஷணம் கமலாதேவி சண்முகலிங்கத்தின் மாணவர்களால் தமிழ்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம் இனிதே  இசைக்கப்பட்டு நிகழ்வு தொடங்கிட சமூக அரசியற் பிரதிநிதி ஈழவேந்தன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.நிறைவாக நன்றியுரையினை நா.தமிழீழ அரசாங்க உறுப்பினர் ஆ .கோபால் அவர்கள் வழங்கினார்.

Aug 30 Event Ca 6 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்Aug 30 Event Ca 4 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்