சைவ ஆலயங்களில் வேள்விக்கான தடை நீங்கியது

சைவ ஆலயங்களில் வேள்விகளின் போது மிருகங்கள் பலியிடப்படுவதை சிறீலங்கா அரசு தடை செய்திருந்தது. ஆனால் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் வேள்விகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.

தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மத வழக்கங்களை தடை செய்வதன் மூலம் அவர்களின் இன அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு பல தமிழ் அதிகாரிகளும் துணைபேகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ் நீதிமன்றத்தில் வலிகாமத்தில் உள்ள கவுணாவத்தை நரசிம்மர் ஆலயத்தில் ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடுவதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் வேள்விக்கான தடையை விதித்திருந்தார்.

ஆனால் அதனை எதிர்த்து சட்டவாளர் கே. வி. எஸ் கணேசராஜா மேன்முறையீடு செய்திருந்தார்.

சைவ மக்களின் தென்மையான மத வழிபாட்டுக் கலாச்சாரத்தில் வேள்வியும் அடங்குவதாக  வாதத்தில் தெரிவித்திருந்ததை நீதிபதி ஏற்றுக்கொண்டு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.