சுவிட்சலாந்தில் முதல் கொரோனா வைரஸ் தோற்று உறுதிசெய்யப்பட்டது

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள திசினோ மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் (இன்று 25) இனங்காணப்பட்டுள்ளார். நாட்டின் தெற்கில் உள்ள இந்த மாநிலம் இத்தாலியின் எல்லையில் அமைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 15 இல் இத்தாலியின் மிலான் நகரில் வைத்து இந்த தோற்று ஏற்பட்டதாக அறியப்படுகிறது.இந்த நோய்க்கான முதல் அறிகுறிகள் இரு நாட்களின் பின் தோன்றியதாக மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளில்,தனது 70களில் உள்ள குறித்த ஆண் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது .

குறித்த நபர் தற்போது லுகானோவிலுள்ள ஒரு வைத்தியசாலையில்
தனித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் நன்றாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு கண்காணிப்பின் கீழ் வாக்கப்படுவர் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சுவிட்சலாந்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மிதமானது எனவும்,இந்த நிலையில் பாடசாலைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் அவசியமற்றவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.