சீனா வூகானில் பாடசாலைகள் ஆரம்பம்

கோவிட்-19 நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் நகரத்தில் பாடசாலைகள் இன்று (6) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதமாக இந்த நகரம் முற்று முழுதாக மூடப்பட்டிருந்தது. எனினும் நோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சீனா அதிகாரிகள் தற்போது அந்த நகர மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இன்று முதல் 212 பாடசாலைகளைச் சேர்ந்த 57,800 மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றனர். எனினும் சீனாவில் ஜுன் மாதம் இடம்பெறும் பரீட்சைகள் ஜுலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.