சீனாவுடன் உறவுகளை பலப்படுத்த திட்டம் – புதிய தூதுவர் நியமனம்

சீனாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்தும் திட்டங்களை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏதுவாக மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பலம் வாய்ந்த அதிகாரியாக இருந்த எம்.சி.பெர்ணன்டோ என்பவர் புதிய சீனா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் இருந்து மேலதிக முதலீடுகள் மற்றும் உதவிகளை இவர் பெற்றுத் தவருவார் என தற்போதைய அரசு நம்புவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

மகிந்தாவின் காலத்தில் எரிபொருள் அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அவர் பின்னர் அவுஸ்திரேலியா தூதுவராக பணியாற்றியிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் தனது பணியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.