சீனாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து ‘புருசெல்லா’ நோய் – 3245 பேர் பாதிப்பு

சீனாவில் உருவாகி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தொடர்ந்து  ‘புருசெல்லா’ என்னும் பக்ரீரியா நோய் பரவி வருகின்றது. இந் நோய்க்கு இதுவரை 3245பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு சீனாவின் குவாங்சோ மாகாண தலைநகரான லாங்ஜோவில் உள்ள சோங்மு லாங்ஜோ உயிரியல் மருந்து நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு ஜுலை, ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில்  ‘புருசெல்லா’ பக்ரீரியா கசிந்துள்ளது. இதனால் மால்டா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொடிய  ‘புருசெல்லா’ பக்ரீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 3245பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பக்ரீரியா தாக்கத்திற்கு உட்படுவோர் தலைவலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் நாட்பட்ட மூட்டுவலி ஆகிய அறிகுறிகளை உடையவர்களாக காணப்படுவர் என நோய்க் கட்டப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் மனிதனிலிருந்து மனிதனுக்கு இது பரவுவது அரிதாக உள்ளதாகவும், பக்ரீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்நோய் பரவக்கூடும் என்றும் மேலும் விலங்குகளால் பரவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து தோன்றிய கொரோனா வைரஸினால் உலகமே திணறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய பக்ரீரியா தொற்றால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டு வருகின்றது.