சீனாவின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட தென்னாசியாவின் உயரமாக கோபுரம் திறக்கப்படவுள்ளது

சீனாவின் எக்சீம் வங்கியின் 80 விகிதமான நிதி உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தென்னாசியாவின் மிக உயரமான லோட்டஸ் கோபுரம் எதிர்வரும் 16 ஆம் நாள் சிறீலங்கா அரச தலைவரினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

350 மீற்றர் உயரமான இந்த கோபுரத்தை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு கடன் வழங்கிய சீனாவின் வங்கி 104 மில்லின் டொலர் செலவில் நிர்மாணித்திருந்தது.

இந்த கோபுரத்தில் தொலைதொடர்பு அருங்காட்சியகம், விடுதி, உணவுச்சாலை, மாநாட்டு மண்டபங்கள், கண்காணிப்பு மையம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

இந்த விழாவில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே. சீனாவின் இந்த கோபுரம் இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற கருத்துக்கள் முன்னர் முன்வைக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.