சீனர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர்

சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றனர் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க, “இலங்கையில் சுமார் 4443 சீனர் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் தற்போது நிலைமை ஒரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தினசரி சுமார் 40 பேரே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு சீனாவில் அந்த எண்ணிக்கையில் கூட ஒரு வீழ்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இப்போது வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலியே” என்றார்.