சிறீலங்காவில் வன்முறைகள் வெடிக்கலாம் – தனது மக்களை எச்சரிக்கும் ஐக்கிய அரபு இராட்சியம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் பெருமளவான வன்முறைகள் நாளுக்கு நாள் பதிவாகி வருவதால், அவை எதிர்வரும் நாட்களில் மோசமடையலாம் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு ஐக்கிய அரசு இராட்சியம் தனது மக்களை எச்சரித்துள்ளது.

மிகவும் அவசியமான காரணங்கள் அல்லாதவர்கள் சிறீலங்காவுக்கு செல்ல வேண்டாம் என ஐக்கிய அரசு இராட்சியத்தின் கொழும்பு அலுவலகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) வெளியிட்ட அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

பெரும்பான்மைச் சிங்கள சமூகத்திற்கு இடையில் வெடிக்கும் வன்முறைகளில் வழமைபோல அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்படலாம் என்பதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் அது பாதிக்கலாம் எனக் கருதப்படுகின்றது.