சிறீலங்காவில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு

மஞ்சளை மக்கள் உணவுக்கு பயன்படுத்துவதுடன், கொரோனா அச்சம் காரணமாக கிருமி கொல்லியாகவும் பயன்படுத்தி வருவதால் சிறீலங்காவில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் அதிகளவில் அதனை கொள்வனவு செய்து வருகின்றனர். சிறீலங்கா அரசு மஞ்சளின் விலை 100 கிராம் 75 ரூபாய்கள் என நிர்ணயித்துள்ளபோதும், தற்போது 300 ரூபாய்களுக்கே அது விற்பனை செய்யப்படுகின்றது.

சாதரணமாக சிறீலங்கா மக்கள் 6,800 தொன் மஞ்சளை ஆண்டு தோறும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உள்ளுரில் 2000 தொன் மஞ்சளே உற்பத்திசெய்யப்படுகின்றது. இறக்குமதிப் பொருட்களுக்கு சிறீலங்கா தடை விதித்ததும் தற்போதைய நிலைக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.