சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி 25 விகிதமாக வீழ்ச்சி

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரசின் தாக்கம், சிறீங்காவில் அண்மையில் ஏற்பட்ட வறட்சி என்பவற்றால் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி 25 விகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா தேயிலை ஏற்றுமதி சபை தலைவர் ஜெயம்பதி மொலிகொட தெரிவித்துள்ளார்.

இந்த வீழ்ச்சி தோட்ட தொழிலாளர்களை அதிகம் பாதித்து வருகின்றபோதும் சிறீலங்கா அரசு அவர்களுக்கு பொருளதார உதவிகளை வழங்குவதில் பின்நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு குடும்பத்தின் சராசரி வாழக்கைச் செலவுக்கு குறைந்தது 16,500 ரூபாய்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் சிறீலங்கா அரசு 5000 ரூபாய்களை மட்டும் வழங்குவதாகவும் அதுவும் எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை எனவும் பொருளியல் ஆய்வாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.