சிறீலங்காவின் ஏழாவது அரச தலைவராக கோத்தபாயா பௌத்த ஆலயத்தில் பதவியேற்பு

சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா இன்று (18) பௌத்த ஆலயத்தில் பதவியேற்றுள்ளார்.

அனுராதபுரம் றுவன்வெலிசேயா பகுதியில் உள்ள மகா மலுவ பௌத்த ஆலயத்தில் இன்று தனது பதவிப் பிரமாணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஏறத்தாள 14 இலட்சம் வாக்குகளைப் அதிகமாக பெற்று வெற்றியிட்டிய கோத்தபாய அதிகமாக சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பலர் நேற்று தமது பதவிகளை துறந்துள்ள நிலையில் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று தனது பதவியை துறந்துள்ளார்.