சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்கள்

சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்களை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக,

  • ஒருவரின் தேசிய அடைாள அட்டையை வேறொருவர் வைத்திருப்பது குற்றமாகும். இவர்களுக்கு தண்டனையாக ஒரு இலட்சம் ரூபா அல்லது 5வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.

இவ்வாறான குற்றம் புரிபவர்கள் பற்றிய விபரம் அறிந்தால், பொலிசாருக்கோ அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினருக்கோ அறியத் தரும்படி பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

  • புதிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு, அதன் பின்னர் பழைய அடையாள அட்டையை பயன்படுத்தினால் அதுவும் குற்றமாகும்.

அடையாள அட்டை காணாமல் போனால், புதிதாக தேசிய அடையாள அட்டை பெற்ற பின்னர் காணாமல் போன அடையாள அட்டை கிடைக்குமாயின் அதை கிராம சேவகர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். இரு அடையாள அட்டையைப் பயன்படுத்துவது குற்றமாகும்

இவ்வாறு வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.