சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டனர்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையே மிகவும் தீர்க்கமான சந்திப்பு ஒன்று 21.08 அன்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக அறிய முடிகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் எதிர்காலம் மற்றும் அரசியல் உபாயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவிற்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அது வெற்றிகரமாக இடம்பெறாதிருக்கின்ற சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மகிந்த- கோட்டா அணிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், 2015ஆம் ஆண்டில் தைரியமாக எடுத்த துணிச்சல் மிகு தீர்மானங்களை மீண்டும் எடுக்கும்படி வலியுறுத்தியிருப்பதாக அறிய முடிகின்றது.