சந்திரிக்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகின்றார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கப் போவதாக கூறியதுடன், அவருடன் ஓர் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டிருந்தார். இதனை அறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திரிகாவை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

நவம்பர் 5ஆம் திகதி கூடவுள்ள சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் மைத்திரி, சந்திரிகாவை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை முன்வைக்கவுள்ளார்.

இதேவேளை அன்றைய தினம் (5) காலை கொழும்பு சுகததாச உள்ளரங்கில், சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு சந்திரிகா தலைமை தாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மேற்குலகத்திற்கு சார்பான ஒரு அரசை ஏற்படுத்த சந்திரிக்கா முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திரிக்காவின் இந்த நடவடிக்கையின் பின்னனியில் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் திட்டம் உள்ளதாகவும், இதன் மூலம் சிங்கள மக்களுக்கும் மேற்குலகத்திற்கும் ஒரு நல்ல உறவு ஏற்பட வாய்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.