சந்திரன் சுருங்குவதால், அங்கு நடுக்கம் – நாசா அமைப்பு தகவல்

சந்திரன் சுருங்கி வருவதால், அங்கு பூமியில் ஏற்படுவது போல் நிலநடுக்கம் ஏற்படுவதாக நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நாசாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட எல்.ஆர்.ஓ என்ற விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இது அறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்களில், 12ஆயிரம் புகைப்படங்கள் சந்திரனின் வடமுனைக்கு அருகிலுள்ள பகுதியில் எடுக்கப்பட்டதாகவும் இவை ஆய்வு செய்யப்பட்ட போதே இந்தத் தகவல் பெறப்பட்டதாகவும் நாசா அமைப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்திரனில் வெப்பநிலை குறைவடைந்து வருவதாகவும் முன்னர் இருந்ததை விட 150 அடி சுருங்கியுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இதனால் மேல் பகுதியில் சுருக்கங்களும், வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க அறிவியல் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு நாசாவினால் ”ஆர்திமிஸ்” என்ற பெயரில் விண்கலம் ஒன்று அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல்முறையாக பெண் ஒருவரை அனுப்பும் திட்டம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஆர்திமிஸ்” என்பது கிரேக்கர்களின் புராணத்தின்படி சந்திரனின் பெண் கடவுள் என்பது பொருள்.