சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது -சுமந்திரன்

சஜித் பிரேமதாசவின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக பேச்சாளரும் யாழ் மாவட்டபாராளுமனற உறுப்பினருமானஎம். கே. சுமந்திரன் தெரிவித்தார். சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம் பேரழிவில் இருந்து நாட்டினையும்மக்களையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவினை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி, உப்போடை துளசி மண்டபத்தில் இந்த
தேர்தல்பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலம் இரண்டு ஜனாதிபதி தேர்லில் ஒருவர் வெற்றி பெறத்தான் போவார்கள். தமிழ் மக்கள் ஏனைய 33பேரில் யாருக்கு வாக்களித்தாலும் அல்லது  சோம்பல் தானமாக வீட்டில் இருந்தாலும் இரண்டு பேரில் ஒருவர் வெற்றிபெறும் நிலையே உள்ளது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கருத்து கணிப்புகளின் படி தமிழ மக்களின்வாக்குகள் இல்லா விட்டால் கோத்தாபாய  ராஜபக்ஸ இலகுவில் வெற்றி பெறுவார் என்பது அனைவரதும் கணிப்பு. அதிகளவில் தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்று அந்தகணிப்புகள் கூறுகின்றன. மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் கைகளில் இந்தநாட்டின் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

நாங்கள் தீர்மானிக்கின்ற போதிலும் எங்களுக்கு எதுவும் நடப்பதில்லையென்ற நியாயமான கருத்தும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அவ்வாறு சொல்லிவிட்டு அந்த தீர்மானத்தினை மற்றவர்களின் கைகளில் விடுவோமாக விருந்தால் எங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை நாங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தவறானவர்கள் தெரிவு செய்யப்பட்டால் எமது நிலையென்ன என்பதை நாங்கள் நீண்டதூரம் கற்பனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த தவறானவர் ஏற்கனவே ஆட்சியதிகாரத்தினை பிரயோகித்து காண்பித்துள்ளார். தனது தமையன்ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவில் இருந்து வருவிக்கப்பட்டவர். அமெரிக்கபிராவுரிமையை பெற்றவர்கள் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கு வழங்கிய ஆவணங்கள் போலியெனகுற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளநிலையில் அது நிலுவையில் உள்ளது. தனது பிரஜாவுரிமை விடயத்தில் கூட முற்று முழுதான பொய்களை உரைத்துக் கொண்டு இந்தநாட்டின் ஜனாதிபதியாக வர அவர் எத்தனிக்கின்றார்.

கோத்தபாய பாதுகாப்ப செயலாளராக இருந்த காலத்தில் என்னென்ன நட பெற்றது என்பது அனைவருக்கும்தெரியும். போர்த் தீர்மானங்களை எடுத்தவர் கோத்தபாய தான். தான் நடாத்திய யுத்தம் தொடர்பில் ஒருபுத்தகமே எழுதியுள்ளார். ஆனால் இந்தியாவின் முன்னணி பத்திரியொன்று சரணடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில்கேட்ட போது தான் யுத்ததினை நடாத்தவில்லை, இராணுவத் தளபதியே நடாத்தியதாக கூறுகின்றார்.

கடத்தல்,கொலைகளை செய்பவர்,இலகுவில் கோபமடைந்து தன்னிலைமப்பவர் ஜனாதிபதியாகும்நிலையின்று ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் கோத்தாவுக்குவாக்களித்தால், அல்லது வாக்களிக்காமல் விட்டால்  அல்லதுஏனைய 33 பேருக்கு வாக்களித்தாலும் அவர்தான் ஜனாதிபதியாக வருவார் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த நிலையில் எங்களது கைகளில்தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற சொல்வதன் அர்த்தம் எங்களையும்காப்பாற்றிக் கொள்ளலாம் இந்தநாட்டினையும் காப்பாற்றிக்கொள்ளலாம்.மற்றவருக்கு வாக்களிப்பதன் மூலம் பேரழிவில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

சுஜித் பிரேமதாசவும் நீண்டகாலம்அரசியலில் இருந்துள்ளார். மக்களை கடததினார் என்ற குற்றச்சாட்டுகள் இல்லை,  அடக்கு முறையினை கையாண்டார் என்ற குற்றச்சாட்டுகள் இல்லை, மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தார் என்ற குற்றாட்டுமட்டுமேயுள்ளது.

கோத்தபாயவினை சந்தித்து நாங்கள்பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருநதோம். அந்தவேளையில் அரசியல் தீர்வுகுறித்து தன்னிடம் கதைக்க வேண்டாம் அண்ணாவுடன் கதைங்கள் என்றுகூறினார். அண்ணன் மகிந்தவிடம் சென்றும் கதைத்தபோது அவர் நாட்டில் உள்ள பிரச்சினைகளை கதைத்தாரே தவிர அரசியல் தீர்வு குறித்து எதுவும்கதைக்கவில்லை.

கோத்தபாய தேர்தல் விஞ்ஞாபனம்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்தேசிய பிரச்சினையிருக்கின்றதா என்பது கூட அதில் இல்லை. அவர்கள பொறுத்தவரையில் இங்கு தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் பல்லின மக்களின் தன்மையினை கொண்டாடுவோம் என்று சொல்லியுள்ளார். பிரிக்கப்படாத நாட்டுக்குள்ளே அதியுட்ச அதிகாரப்பகிர்வு செய்யப்படும், இடைநிறுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் முழுமையாக்கப்படும், நிறைவேற்றப்படும் என பல விடயங்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்பிரேமதாசவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கின்ற காரணத்தினால் அதனையெல்லாம் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நான் கூறவரவில்லை. ஆனால் இவற்றினையெல்லாம் செய்வேன் என்று கூறக்கூடிய துணிவு அவருக்கு இருந்திருக்கின்றது. மற்றவருக்கு எதினையும் சொல்வதற்கான மனம் இருக்கவில்லை. சஜித் வெற்றி பெற்றால் இவற்றினை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது குறித்து தமிழ் தேசியகூட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.