சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆபத்தானது மகிந்த குற்றச்சாட்டு

பிரதமரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபை விடவும் ஆபத்தானதாகவே சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒற்றையாட்சியை பாதுகாத்து சமஸ்டிக்கு எதிராக செயற்படுவதற்கான எழுத்துமூல உறுதிப்பாட்டை மகாநாயக்க தேரர்கள் முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும், நாட்டில் பிரதான கட்சியொன்று ஒற்றையாட்சியை நீக்கி விட்டு சமஸ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமை இதுவே முதல் தடவையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.