கோவிட் 19 – கொங்கோ நாட்டின் முன்னாள் அரச தலைவர் பலி

கொரோனா வைரசின் தாக்தத்திற்கு கொங்கோ நாட்டின் முன்னாள் அரச தலைவர் ஜக்கிஸ் ஜொகிம் (81) பிரான்ஸ் இல் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1977 ஆம் ஆண்டில் இருந்து 1979 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் நோய்க்கு உட்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1979 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் பிரான்ஸ் இல் தஞ்சமடைந்திருந்தார்.