கோத்தபயாவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

அமெரிக்காவில் கோத்தபயா ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை நிராகரிக்குமாறு கோரி கோத்தபயா ராஜபக்ஷவின் சட்டத்தரணி அசோக டி சில்வா, தாக்கல் செய்த வழக்கு, எதிர்வரும் 16ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மெனுவெல் ரியல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வழக்கு தாக்கல் செய்த பெண் வெளிநாடு ஒன்றில் வாழ்கின்றார். இந்நிலையில் அமெரிக்கா இந்த வழக்குடன் ஒருபோதும் தொடர்புபடவில்லை. இதனால் அமெரிக்க நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க அதிகாரம் இல்லை என கோத்தபயாவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்தவின் கொலை கோத்தபயா ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய போது நடந்ததாகவும், இருப்பினும் அதற்கும் கோத்தபயாவிற்கும் தொடர்பு இல்லை எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.