கொரோனா வைரஸ் – முடங்கியது சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இதுவரையில் 2இ239 பேர் பலியாகியுள்ளதாகவும்இ 75இ569 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதனிடையேஇ உலகின் 45 பில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டும் சுற்றுலாப் பயணிகளின் சொகுசுக் கப்பல் சேவை முடக்கத்துக்கு வரும் நிலையை அடைந்துள்ளதானது பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

3700 பயணிகளுடன் யப்பானின் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகள் கப்பலில் உள்ள 540 பயணிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டது இந்த தொழில்துறையை அதிகம் பாதித்துள்ளது.

வெஸ்ரடாம் என்ற மேலும் ஒரு கப்பல் கம்போடியா கடற் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. கார்னிவேல் நிறுவனத்தின் இரு கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளபோதும்இ இந்த செய்தி சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் 45 பில்லியன் டொலர்களை வருமானமாகக் கொண்ட இந்த தொழில் முற்றாக முடங்கும் நிலைக்கு வந்துள்ளது.50 மேற்பட்ட பயணிகள் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

7 துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தை கைவிட்டுள்ளதுடன்இ பலர் பாதிப்படைந்துள்ளனர்.கரீபியன்இ நோர்வேஜியன் கப்பல் நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன. 10 தொடக்கம் 16 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளன. வைரசின் தாக்கம் இந்துடன் முடிந்து விட்டால் நாம் தப்புவோம்இ அது ஆசியாவை கடந்து விட்டால் நிலமை மாறிவிடும் என சுற்றுலாப் பயணிகள் கப்பல்துறை ஆய்வாளர் அலக்ஸ் பிரிங்நால் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்துறையானது தற்போது ஆசியாவிலேயே வளர்ந்து வருகின்றது. 4.2 மில்லியன் பயணிகள் 2018 ஆம் ஆண்டு பயணம் செய்துள்ளனர். 2017 ஆம் ஆண்டை விட இது 1.2 மில்லியன் அதிகமாகும்.2018 ஆம் ஆண்டு சீனா பயணிகள் 277 பில்லியன் டொலர்களை செலவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏனைய நாட்டு பயணிகளுடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகமாகும்.