கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

இந்த செய்தி எழுதும் போது 190 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதனை குணப் படுத்துவதற்கு மருந்துகள் கிடைக்கவில்லை.  இந்த மருந்தை பெறுவதில் நாம் எவ்வளவு தூரத்தில் உள்ளோம்?

மருந்தை கண்டறிவதில் என்ன பணிகள் இடம்பெறுகின்றன?

உலகில் 150 இற்கு மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவை எல்லாம் முன்னர் வைரஸ் நோய்களை குணப்படுத்த பயன்பட்டவை. உலக சுகாதார நிறுவனம் இதனை விரைவுபடுத்த இணைந்த மருந்துகளின் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 5,000 நோயளர்களில் மருந்துகளை பரீட்சித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. குணமடைந்த நோயாளிகளின் குருதியை பயன்படுத்தி குணமாக்கும் நடவடிக்கைகளையும் உலகில் உள்ள ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

எந்த வகையான மருந்துகள் செயற்திறன் மிக்கவை?

நேரடியாக உடலுக்குள் சென்று கொரோனா வைரசை தாக்கும் அன்ரி வைரஸ் மருந்து அல்லது எதிர்ப்பு சக்தியை அமைதிப்படுத்தும் மருந்து, ஏனெனில் எதிர்ப்பு சக்தி மேலதிகமாக செயற்படும் போது நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு. இது உடலை அதிகம் பாதிக்கும். அல்லது குணமடைந்தவர்களின் குருதியில் உள்ள Antibody எனப்படும் நோயெதிர்ப்பு சக்தியை பயன்படுத்துதல். அவை வைரசை தாக்கியழிக்கும்.

மிகவும் நம்பிக்கையான மருந்து எது? 

றெம்டிசிவிர் (remdesivir) என்ற மருந்தே தற்போது அதிக வினைத்திறனுள்ளதாக உள்ளது என தனது சீனாவிற்கான பயணத்தின் பின்னர் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி புறூஸ் அயில்வாட் தெரிவித்துள்ளார். இது எபோலா வைரசிற்கு எதிராக தயாரிக்கப்பட்டது.unnamed 7 கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

மெர்ஸ் எனப்படும் மற்றுமெரு கொரோனா வைரசிற்கு எதிராகவும் இது செயற்படுவது மிருகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் இருந்து கசிந்த தகவல்களும் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் உலகில் ஆய்வு செய்யப்படும் நான்கு மருந்துகளில் இதுவும் ஒன்று.

எயிட்ஸ் மருந்து குணப்படுத்துமா?

lopinavir and ritonavir என்ற மருந்துகள் தொடர்பில் அதிகளவு பேச்சுக்கள் உள்ள போதும் ஆதாரம் குறைவு. ஆய்வுகூடத்தில் இது செயற்பட்ட போதும் மனிதர்களில் அது பலனளிக்கவில்லை. ஆனால் இது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆரம்பகட்டத்தில் சில சமயம் பலன்தரலாம்.

மலேரியா மருந்து குணப்படுத்துமா?

தற்போது இதுவும் பரீட்சிக்கப்படுகின்றது. குளோரோகுயின் வகையான இந்த மருந்து வைரஸ் எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி தணிப்பு ஆகிய தன்மைகளைக் கொண்டது. இதனை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் கூறிய பின்னரே இதன் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியது. ஆனால் இந்த மருந்து குணப்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் மருந்துகள் உண்டா?

நோயெதிர்ப்பு சக்தி வைரசுக்கு எதிராக அதிகமாக செயற்பட்டால் அது உடலில் வீக்கங்களை ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தி நல்லது என்ற போதும் அது அதிகமாக செயற்பட்டால் மரணம் ஏற்படும்.

இணைந்த மருந்துகளின் பயன்பாடு இந்த வீக்கங்களை குறைக்குமா என ஆய்வு செய்து வருகின்றது. interferon beta என்ற இராசயனமே வீக்கங்களுக்கு காரணம். எனவே அதனை தணிப்பதற்கு dexamethasone என்ற மருந்து பரீட்சிக்கப்படுகின்றது.

குணமடைந்தவர்களின் குருதியை பயன்படுத்தலாமா?file 20200401 23105 ne52k8 கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

குணமடைந்தவர்களின் குருதியில் நோயெதிர்ப்பு சக்தி மூலக்கூறுகள் (Antibody) இருக்கும். அது வைரசை கொல்லும். எனவே அவர்களின் குருதியின் பிளாஸ்மா பகுதியை நோயாளர்களுக்கு செலுத்தலாம். அமெரிக்காவில் இது 500 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளும் முயற்சி செய்கின்றன.

எப்போது மருந்து கிடைக்கும்?

அதனை தற்பேது கூறமுடியாது. ஆனால் தற்போதைய சோதனைகளின் முடிவுகள் எதிர்வரும் சில மாதங்களில் கிடைக்கும். இது தடுப்பு மருந்தின் சோதனை முடிவுகளை விட இலகுவானது. ஏனெனில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட மருந்துகளை தான் வைத்தியர்கள் பரிசோதனை செய்கின்றனர். ஆனால் தடுப்பு மருந்து புதிதாக தயாரிக்கப்படுகின்றது.

ஏன் எமக்கு சிகிச்சை தேவை?

முதலாவது காரணம் உயிர்களை காப்பது. அது மட்டுமல்லாது தற்போதைய தனிமைப்படுத்தல்களில் இருந்து மக்கள் மீள முடியும். சிகிச்சை இருந்தால் இந்த நோய் ஒரு சாதாரண நோயாக கருதப்படும். நோயளர்களுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். எனவே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும். மக்களின் நடமாட்டத்தை கட்டுப்பதுத்த தேவையில்லை.

தற்போது வைத்தியர்கள் எவ்வாறு சிகிச்சை அளிக்கின்றனர்?

பெரும்பாலனவர்கள் சாதாரண அறிகுறிகளை காண்பிப்பதால், ஓய்வெடுத்தல், பரசிற்றமோல் எனப்படும் வலி நிவாரனியை பயன்படுத்துதல், அதிக நீரை பருகுதல் மூலம் அவர்கள் வீடுகளிலேயே குணமடைந்துவிடுகின்றனர்.

ஆனால் சிலருக்கு சுவாசம் தடைப்படுவதனால் செயற்கைச் சுவாசம் தேவைப்படுகின்றது.

பிந்திய செய்தி

வைரஸ் எதிர்ப்பு மருந்தான remdesivir என்ற மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்துள்ளது.

237 நோயாளிகளில் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்தை உண்கொண்டவர்களில் 13.9 விகிதமானோர் இறந்துள்ளனர். மருந்து எடுக்காதவர்களில் 12.8 விகிதமானோர் மரணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பக்கவிளைவுகளால் இந்த ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது.