கொரோனா வைரசை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தை மறுக்கிறது சிறீலங்கா

கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு படையினரை பயன்படுத்திவரும் சிறீலங்கா அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை மிரட்டி கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தென்னாசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கடந்த
வெள்ளிக்கிழமை (3) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்பில் விமர்சனங்களை மேற்கொளபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிறீலங்கா காவல்துறை அதிகாரி மிரட்டியுள்ளார். அதாவது அனைத்துலக சட்டவிதிகளை மதிக்காது சிறீலங்கா அரசு கருத்துச் சுதந்திரத்தை படையினர் மூலம் மறுத்து வருகின்றது.
விமர்சனங்கள் அவர்களின் பணிகளை பாதிக்கப்போவதில்லை, ஊரடங்குச் சட்ட நேரத்தில் மக்கள் மிகவும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை உதவிகள் தேவை எனவே அது தொடர்பில் அவர்கள் தமது கருத்துக்களை பகிர விரும்புவார்கள்.
போர்க் குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்ட சவீந்திர சில்வாவையே சிறீலங்கா அரசு இந்த பணிக்கு நியமித்துள்ளது. அவரின் நியமனம் சிறுபான்மை மக்களை அச்சமடைய வைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.