கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு உதவி

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை எதிர்கொண்டு மருத்துமனைகளில் போராடிவரும் சுகாதாரப்பணியாளர்களுக்கான தனது தோழமையினை தொடர்ந்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது.

கனடாவின் தனது தொடர் நடவடிக்கையாக  Scarborough Hospital Birchmount Campus  மருத்துவமனைக்கு தனது தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் உணவுபொதிகளை வழங்கியுள்ளது.

போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் எமது மக்கள் . பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள்.  முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக அனுட்டிப்பது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது நெஞ்சில் சுமந்தவண்ணம் மானிடநேயம் கொண்ட எமது விடுதலைப்பண்பை உலகின் கண்களை நோக்கி வெளிப்படுத்துகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

TETG 2 கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு உதவி

இதேவேளை  Corona – Tamils Task Force   எனும் தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கியுள்ளதோடு, கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின் அடிப்படையில் உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.