கொரோனா ரைவஸ் இற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கே பயன்தரும்

கொரோனா ரைவஸ் இற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களுக்கே மனிதர்களில் இருக்கும் எனவும் இது நோய்எதிர்ப்பு சக்தி கடவுச்சீட்டு (immunity passports) என்ற நாடுகளின் திட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் 4 வகையான கொரோன வைரஸ் இற்கு எதிரான எதிர்ப்பு சக்தி தொடாபில் 10 மனிதர்களில் கடந்த 35 வருடங்களாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வகை வைரசுகளே பொதுவான காச்சல், தடிமல் போன்ற சுகவீனங்களுக்கான காரணிகள். ஆனால் இந்த வைரசுகளுக்கு எதிரான எமது நோய் எதிர்ப்பு சக்தி குறுகிய காலம் கொண்டது.

12 மாதங்களின் பின்னர் மக்கள் மீண்டும் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 6 மாதங்களின் பின்னர் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவடைகின்றது.

நோய் எதிர்ப்பு சக்திக்கான பரிசோதனைகளை செய்வதன் மூலம் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து விடுபடலாம் என நாடுகள் நம்புகின்றன. ஆனால் இந்த பரிசோதனைகளின் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மட்டுமே கணக்கிடலாம் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் தடுப்பு மருந்தின் பரிசோதனையை பெருமளவில் மக்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த தடுப்பு மருந்தானது ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு போடப்பட வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 6 தொடக்கம் 12 மாதங்களில் மீண்டும் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிரச்சனையாக உள்ளது. ஆனால் மீண்டும் பாதிக்கப்படுபவர்கள் எவ்வாறான தாக்கத்திற்கு உள்ளாவார்கள் என்பது தொடர்பில் தெளிவற்ற தன்மை உள்ளதாக பேராசிரியர் லியா வன் டெர் ஹொக் தெரிவித்துள்ளார்.