குடிவரவை நிறுத்தினார் அமெரிக்க அதிபர் – இந்தியாவை கடுமையாக பாதிக்கும்?

அமெரிக்காவில் மக்கள் குடியேறுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் தற்காலிக தடை விதித்துள்ளார்.

தனது ருவிட்டர் தளத்திலேயே அவர் இந்த அறிவிப்பை நேற்று (20) நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அமெரிக்க மக்களின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்காகவே தான் இதனை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் குடியேறியிருந்தனர், அவர்களில் இந்தியா, சீனா, மெக்சிக்கோ, டொமினிக் குடியரசு, கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம்.

கடந்த ஆண்டு அகதிகளாக அங்கு 30,000 மக்கள் சென்றிருந்தனர். அவர்களில் கொங்கோ, மியான்மார், உக்ரேன், எரித்திரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம்.