கீத் நொயர் கொலை முயற்சியில் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு; ஆதாரங்கள் உள்ளன – சட்டமா அதிபர்

ரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சி.ஐ.டி.யினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான இணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்னவே சட்ட மாஅதிபர் சார்பில் மேற்படி கருத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

கீத்நொயரின் கடத்தல் மற்றும் கொலை முயற்சி சம்பந்தப்பட்ட வழக்கில் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளமை ஆதாரங்களுடன் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரி ‘ரிவிர’ ஸ்தாபகரான உப்பாலி தென்னகோனின் தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஜூலை 08 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். இதற்கமையவே அவரை கீத்நொயரின் கடத்தலுடனும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் சி.ஐ.டி யினரிடம் கேட்டுக்ெகாண்டார்.