கிழக்கு மாகாணத்தை கண்காணிக்கும் விமானம் வீழ்ந்தது – விசாரணைக்கு உத்தரவு

கிழக்கு மகாணத்தின் பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் விமானம் வீழ்ந்து நொருங்கியது தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வீழந்து நொருங்கிய சீனா தயாரிப்பான வை-12 ரக விமானம் குறித்து மிகவும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் சமால் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாழ்வாகச் சென்ற விமானம் மலைப் பகுதியில் மோதியதால் விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

சிறீலங்கா வான்படையின் இரு அதிகாரிகளும், இரு கண்காணிப்பு அதிகாரிகளும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.