காணமல் போனோர் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை இல்லை ஆனால் நினைவிடங்கள் அவசியமாம்.

இலங்கையில் காணாமல்போனோரை நினைவுகூறத்தக்க இடங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

42ஆவது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில்  இடம்பெற்று வருகிறது. இந்த பேரவையில் குறித்த செயற்குழு முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த குழு இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தி இருந்தது.குறித்த ஆய்வுகளின்படி இலங்கையில் காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூறுவதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லை என அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பாக தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விடுத்து ஐநா இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை ஒரு திசைமாற்று நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது என்கின்றனர் நோக்கர்கள்.