ஐ.நா. மீது பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள  சீ.வி.விக்னேஸ்வரன்

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான  ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டிருந்ததாக பாரதூரமான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன்  இந்த குற்றச்சாட்டை முன்வைத்துடன், ஐ.நா வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி, சிறிலங்காவின் அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக அறிக்கையொன்றையும் தயாரித்திருந்ததாகவும் கடுமையாக சாடியிருக்கின்றார்.

‘பாதிக்கப்பட்டோர் – பதின்மம் கழிந்தும்’ என்னும் தலைப்பில் ஒரு சுய மதிப்பீட்டு நிகழ்வை யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் யாழ்ப்பாணம் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில்  நடாத்தியிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன் சுபினே நந்தியின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார்.