ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை சிறீலங்கா மீறியுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் செய்தது தமக்கு மிகப்பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நியமனமானது ஐக்கிய நாடுகள் சiயின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சிறீலங்கா வழங்கிய உறுதிமொழி குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. போர்க்குற்ற நீதி விசாரணைகளை மேற்கொள்வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு சிறீலங்கா உடன்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசேல் பசெலட் தெரிவித்த கருத்தையே ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளது. அதாவது சில்வா மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளதாக பசெலட் தெரிவித்திருந்தார்.

இந்த நியமனமானது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிப்பதுடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறான செய்திகளை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.