ஐ.நா தொடர்பான சிறீலங்கா அரசின் முடிவை நிராகரித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்றைய தினம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் உரை தொடர்பாக சிறீலங்காவின் நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் நிராகரித்தார்.

நேற்றைய தினம் தினேஸ் குணவர்த்தன தனது உரையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015, 2019ஆகிய ஆண்டுகளில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து சிறீலங்கா விலகுவதாக அறிவித்திருந்தார். அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு சிறீலங்கா உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான ஆணைக்குழுவை நியமிக்கும் என்றும் கூறியிருந்தார்.

இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து சிறீலங்கா விலகுவதாக அறிவித்தமைக்கு இங்கிலாந்தும் கனடாவும் நேற்றைய தினம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் இன்று(27) சிறீலங்கா குறித்த அறிக்கையை முன்வைத்துப் பேசிய மிச்செல் பச்லெட் சிறீலங்காவின் நிலைப்பாட்டை நிராகரித்திருந்தார்.

உள்நாட்டு செயல்முறைகள் கடந்த காலங்களில் பொறுப்புக் கூறலை நிலைநாட்டுவதில் தனிப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றன. ஆகவே மற்றொரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றது. அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் மனித உரிமை மீறல்கள் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.