ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியது கவலை தருகின்றது – ஐரேப்பிய ஒன்றியம்

சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்வதுடன், இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை, மனித உரிமைகளை பேணுதல், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அமைதியையும், இன ஒற்றுமையையும் சிறீலங்கா அரசு முன்னெடுக்க வேண்டும். மேலும் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், பொது அமைப்புக்களின் பாதுகாப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக வேறு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். காணாமல்போனோர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது எமக்கு கவலையை தோற்றுவித்துள்ளது என தெரிவித்துள்ளது.