ஐ.நா உடன்பாட்டில் இருந்து வெளியேறுமாறு சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேற வேண்டும் என சிறீலங்காவின் தேசிய இணைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை உப தலைவராக கொண்ட இந்த சபை மேலும்தெரிவித்துள்ளதாவது:

புதிய அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா இந்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

இந்த தீர்மானத்தை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவே ஏற்றுக் கொண்டிருந்தார். இது அமெரிக்கா மேற்கொண்ட சதி நடவடிக்கையாகும்.

வடக்கு கிழக்கு மக்களைத் தவிர நாட்டின் ஏனைய பகுதி மக்கள் கோத்தபாயாவுக்கே வாக்களித்துள்ளனர். அவர் 13 இலட்சம் அதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிறீலங்கா அரசு தனது முழு வழங்களையும் ஒருங்கிணைத்து ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து வெளியேற முற்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.