எல்லை மீறிய பகிடிவதை – மாணவி தற்கொலை முயற்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகும் வைரலாகும் செய்தி

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் பகிடிவதைகள் மாறிவருகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் மீது மிகக் கொடூரமான முறையில் பகிடிவதை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன.

புதுமுக மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கும் மாணவர்கள் அநாகரிகமான முறையில் அவர்களுடன் உரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடரும் இவர்களின் தொல்லை காணரமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவியின் தந்தை அவரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.அதாவது மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வாட்ஸ் குழு ஒன்றினை உருவாக்கிய அவர்கள் மாணவியிடம் நிர்வாணப் படங்களை அனுப்புமாறும் மிரட்டியுள்ளனர்.இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கும் வந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2444 எல்லை மீறிய பகிடிவதை - மாணவி தற்கொலை முயற்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகும் வைரலாகும் செய்தி

தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்வாறு பல்கலைக் கழக மாணவர்களிடையே அநாகரிகமாக செயற்பட்டு வருவதனை ஏன் பல்கலைக் கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது கேள்விக்குறியே.பல்கலைக்கழகங்களிற்குள் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக அண்மையில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இதற்கேற்ப இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற போர்வையில் நிர்வாணப்படம் கேட்டு மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துவரும் மாணவர்களை எவ்வாறு எப்போது தண்டிக்கப்போகின்றீர்கள்.

கல்வி கலை கலாசாரம் என பல்துறைசார்ந்து பல அரசியலில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இது போல சில மாணவர்களின் வரம்பு மீறிய செயல் கல்வி சமூகத்தை மிகையாகப் பாதிக்கின்றது.

பகிடிவதை எனும் போர்வையில் எல்லை மீறும் மாணவர்களுக்கு கடுமமையான தண்டணைகள் வழங்குவதன் மூலமே பல்கலைக்கழகத்தின் நற் பெயரையும் கல்வி சமூகத்தினரையும் கட்டியெழுப்பமுடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.