ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் சில மாற்று நடவடிக்கை – நகரசபை தவிசாளர்

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எடுக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளில் இன்னும் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளhttp://www.ilakku.org/wp-admin/admin.php?page=pvcp-listதாக வவுனியா நகரசபை தவிசாளர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் முன்னெடுக்கபட்டுவரும் ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படுகின்றது. எனவே அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரை நோக்கி அதிகளவில் வரும் நிலை காணப்படுகின்றது. கடந்த திங்கட் கிழமை ஊரடங்குசட்டம் தளர்தப்பட்டபோது அதிகமான பொதுமக்கள் நகரை நோக்கி வருகை தந்தமையால் திட்டமிட்ட வகையில் சன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தது. இதனால் வைரஸ் தாக்கம் இலகுவாக பரவகூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

எனவே நாளையும் அந்த நிலை ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம் . அந்தவகையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தாங்களே எடுத்துவந்து விற்பனை செய்துகொள்ள முடியும். அதற்காக சில பகுதிகளை நாம் ஒதுக்கியுள்ளோம்.

காமினி மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் , ஹொறவபொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதியபேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் சன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், சமூக இடைவெளியினை பேணும் வகையிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் காமினி மகாவித்தியாலய மைதானத்திற்குள் மரக்கறி வகைகள் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவும், மீன், இறைச்சி, தேங்காய் ஆகிய பொருட்களை காமினி மகாவித்தியாலய மைதானத்திற்கு வெளியிலும், வாகன தரிப்பிடத்தினை காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியோரத்திலும் நிறுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகமான சனநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சில வீதிகளை ஏற்கனவே மூடியுள்ளோம். அவ்வாறாக மூடப்பட்ட வீதிகள் தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் மக்கள் நலன் கருதி சமூக இடைவெளியினை பேணவே இவ்வாறான சில மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

தற்போது வெயில் அதிகமாக காணப்படுவதனால் காமினி மகாவித்தியாலய மைதானத்திற்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக பந்தலினை கொண்டுவந்து தாங்களே அமைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும்

நகரசபை தவிசாளர் இ.கௌதமன்