ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த யாழ் வியாபாரிகள்

மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியதை தொடர்ந்து யாழில் அத்தியாவசியப் பொருட்களை வாக்குவதற்கு அதிக மக்கள் கடைககளுக்கு சென்றதால் பதற்றம் ஏற்படிருந்தது.

மக்கள் தமக்கிடையில் குறிப்பிட்ட தூரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம் என்ற அரசின் நடைமுறையை கூட மக்கள் மதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கடைகளுக்கு சென்ற மக்கள் பொருட்களை குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே வாங்கவேண்டும் என சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஒரு கிலோ பருப்பு, தகரங்களில் அடைக்கப்பட்ட மீன் வகை இரண்டு என்பன உட்பட பல பொருட்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடைகளில் பெருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதுடன், வடபகுதியின் பெரும் சந்தையான மருதனார்மடம் சந்தையிலும் காய்கறிகள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் வலிகாமம் பிரதேச சபையின் அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.