உலக புற்றுநோய் தினம்:புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு-வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சோதிக்கப்படவில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று ‘நேச்சர் இம்யூனாலஜி’ எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன.

breast cancer survivors உலக புற்றுநோய் தினம்:புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு-வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

புதிய கன்டுபிடிப்பு என்ன?

உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களைத் தாக்கும்.

மனித உடலுக்கு எதாவது தீங்கு ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அவற்றைத் தாக்கி அழிக்கும் உயிரணுக்கள் டி-உயிரணுக்கள் (T-Cells) எனப்படும்.

அனைத்து வகையான புற்று நோய்களையும் கண்டறிந்து அழிக்கும் ஒரு வகை டி-உயிரணுவைத்தான் இப்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இது சாத்தியம் என்று யாரும் இதுவரை நினைக்கவில்லை. ஒரே வகையான டி-உயிரணு அனைத்து வயதினருக்கும் உண்டாகும் அனைத்து வகையான புற்றுநோயையும் குணமாக்கும் வல்லமை பெற்றுள்ளது,” என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ஆன்ட்ரூ செவல் பிபிசியிடம் கூறினார்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த வகை டி-உயிரணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் ‘ஏற்பிகள்’ (receptors) ஒரு குறிப்பிட்ட வேதியியல் நிலையில் புற்றுநோய் அணுக்களை கண்டறியும் திறன் உடையவை.

ரத்தம், தோல்,எலும்பு, மார்பு, சிறுநீரகம், கருப்பை உள்ளிட்ட உடலின் பாகங்களில் உண்டாகும் புற்றுநோய் அணுக்களை கண்டறிந்து இந்த டி-உயிரணுக்கள் தாக்குவது ஆய்வக சோதனைகளில் உறுதியாகியுள்ளது.

எனினும், இவற்றால் சாதாரண உயிரணுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மனித உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களின் மேற்பரப்பிலும் இருக்கும் MR1 எனும் மூலக்கூறுடன் டி-உயிரணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் ‘ஏற்பிகள்’ உடன் இணையும்போது, MR1 மூலக்கூறு அது இருக்கும் அணுவின் வழக்கத்துக்கு மாறான வளர்சிதை மாற்றம் நிகழ்வதை நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு காட்டிக்கொடுக்கிறது.

“புற்றுநோய் அணுக்களில் உள்ள MR1 மூலக்கூறை கண்டறியும் டி-உயிரணுக்களை கண்டறிவது இதுவே முதல் முறை,” என ஆய்வாளர் கேரி டால்டன் பிபிசியிடம் தெரிவித்தார்.

புற்றுநோயை குணப்படுத்துவதில் இது ஏன் முக்கியமானது?

டி-உயிரணுக்கள் மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன.

CAR-T (Chimeric antigen receptor T cells) மூலம் மரணத்தின் விளிம்பில் உள்ள புற்றுநோயாளிகளை முற்றும் குணப்படுத்தும் முறை மிகவும் பிரபலமானது.

எனினும் இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியாது.Vaitkevicius Image உலக புற்றுநோய் தினம்:புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு-வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

புற்றுக் கட்டிகளை உருவாக்கும் புற்றுநோய்களில் மட்டுமே இந்த முறை தடுமாறுகிறது. ரத்தப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களிலேயே நல்ல பலனளிக்கிறது.

எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை டி-உயிரணுக்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தும் திறன் உடையது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நன்றி- பிபிசி