உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் – பிரிட்டிஸ் ஹெரால்ட்

பிரிட்டிஸிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், 2019ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஸ் ஹெரால்ட், 2019ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த தலைவராக யாரை நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை தனது வாசகர்களிடம் கேட்டு அதற்கு வாக்கெடுப்பும் நடத்தியது.

இந்த வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின், சீன அதிபர் ஜின்பிங் உட்பட 25இற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பெயர் பட்டியல் இடம்பெற்றிருந்தன.

வாக்கெடுப்பில் 31% வாக்குகள் பெற்று மோடி முதலிடம் பிடித்தார். ரஸ்ய அதிபர் விளாடிமர் புடின் 29%  வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், அமெரிக்க அதிபர் ட்ரம் 21.9%  வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், சீன அதிபர் ஜின்பிங் 18.1%  வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்தனர்.

இதனையடுத்து ஜுலை 15ஆம் திகதி வரை பிரிட்டிஸ் ஹெரால்ட் பத்திரிகையின் முன்பக்க அட்டையில் மோடியின் படம் இடம்பெறவுள்ளது.