உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது

உலகின் மிகப்பெரிய காடான அமேசன் காடு தீப்பற்றி எரியும் இவ்வேளையில், உலகின் இரண்டாவது பெரிய காடு என அழைக்கப்படும் ஆபிரிக்கக் காடுகளும் (Sub-Saharan Africa) எரிய ஆரம்பித்துள்ளன. உலகின் இரண்டாவது நுரையீரல் என இந்த மழைக்காடுகள் அழைக்கப்படுகின்றன.

கொங்கோ, கெமரூன், அங்கோலா ஆகிய நாடுகளினூடாகப் பரவியிருக்கும் இந்தக் காடுகளினூடே தீயும் வெகு விரைவாகப் பரவி விட்டது. ஒரு மில்லியன் சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்தக் காடுகள் அமேசன் காடுகளைப் போலவே கார்பன் டை ஒக்சைட்டை (கரியமலை வாயு) உள்ளெடுத்து ஒட்சிசன் (பிராணவாயு) வாயுவை அதிகளவில் வெளிவிடுகின்றது.

Africa fire 2 உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடும் தீப்பற்றியுள்ளது3.3 மில்லியன் சதுர கிலோமீற்றர் சதுர பரப்பளவுள்ள இந்தக் காடுகளில் மிகப் பெரியளவில் தீப்பற்றியுள்ளது. காட்டுத்தீ தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.