ஈழத் தமிழர் எங்கள் இரத்தம் என கோஷம் எழுப்பிய திமுக தொண்டர்கள்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(17) காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ஸ்டாலின் உரையாற்றினார்.

ஸ்டாலினின் உரையைத் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதைப் பின்பற்றி தொண்டர்களும் முழக்கங்கள் எழுப்பினர்.

மத்திய அரசே மத்திய அரசே பிரிக்காதே பிரிக்காதே மதங்களால் மக்களைப் பிரிக்காதே. என்ற கோஷங்களுடன், எங்கள் இரத்தம்.. எங்கள் இரத்தம்.. ஈழத் தமிழர்கள் எங்கள் இரத்தம். காப்போம் காப்போம் ஈழத் தமிழர்களைக் காப்போம். காப்போம் காப்போம் சிறுபான்மையினரை காப்பாற்றுவோம். வஞ்சிக்காதே வஞ்சிக்காதே, ஈழத் தமிழரை வஞ்சிக்காதே போன்ற கோஷங்களும்  எழுப்பப்பட்டன.

இதே திமுக அரசு ஆட்சியிலிருந்த போது திமுக தலைவராக ஸ்டாலினின் தந்தை கருணாநிதி திமுக தலைவராக இருந்தார். இவரின் ஆட்சியின் போதே, ஈழத்தில் பெரும் போர் நடைபெற்றது. அதை கண்டுகொள்ளாது, அந்தப் போரை நிறுத்துவதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாது இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் இப்போது ஆட்சியிழந்துள்ளனர். இதனாலேயே ஈழத் தமிழர்கள் பற்றி கோஷம் எழுப்புகின்றனர். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், முன்னர் போன்றே செயற்படுவர் என்பதே  மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.