ஈரானிய எண்ணெய்க் கப்பலை விடுவித்தது பிரித்தானிய நீதிமன்றம்

பிரித்தானியப்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலை தொடர்ந்து பயணிக்க பிரித்தானிய ஜிப்ரால்டரின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கப்பலை தொடர்ந்து தடுத்துவைக்க அமெரிக்கா கடைசி நிமிடத்தில் விண்ணப்பம் செய்த சில மணி நேரங்களிலேயே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி ஈரானிய மசகு எண்ணெயை சிரியாவிற்கு கொண்டு செல்வதாக சந்தேகத்தின் பேரில் கிரேஸ் 1 கப்பலை பிரிட்டிஷ் ராயல் மரைன்கள் ஜிப்ரால்டர் கடற்கரையில் ஜூலை 4 அன்று கைப்பற்றினர்.

ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்து, கைப்பற்றலை “கடற் கொள்ளை ” என்று கூறியது.