இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோரோவ் என்பவருடன், சிறிலங்காவிற்கான வெளிவிவகார அமைச்சர் தயான் ஜயதிலக பேச்சு நடத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களிற்கு இரங்கலைத் தெரிவித்த, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இந்த தீவிரவாத செயல்களை கண்டித்துள்ளார்.

1990களில் ரஷ்யாவின் தொண்டர் நிறுவனங்கள் மூலம் பரவிய வகாபியிசம் மற்றும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ரஷயா எதிர்கொண்ட அனுபவங்களை சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் ஜெனரல் தர நிலையில் உள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், சோவியத் ஒன்றிய காலத்தில்  K G B , என அழைக்கப்பட்டு, பின்னர் F S B  என்றழைக்கப்பட்ட சமஷ்டி புலனாய்வு சேவையில் பிரதிப் பணிப்பாளராக இருந்தவராவார். 2004 முதல் 2015 வரை D K R  புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.